மூன்றாவது முறையாக தனது மனைவியை இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்துள்ளார் புகழ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் பல படங்களை தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

பென்சி என்பவரை காதலித்து வந்த புகழுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்னர் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இவர்கள் சமீபத்தில் இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். தன்னுடைய தாய் தந்தையின் ஆசைக்காக ஒரு முறை தன்னுடைய மனைவியின் தாய் தந்தையின் ஆசைக்காக இன்னொரு முறை என திருமணம் செய்து கொண்டதாக புகழ் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற உள்ளங்கள் ஆசைப்பட்டால் இன்னொரு முறையில் திருமணம் செய்து கொள்ள தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகழின் இந்த செயல் பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.