Public Exam
Public Exam

Public Exam – தமிழக பள்ளிகளில் படிக்கும் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நேற்று அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 5,8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வருவது குறித்து அரசுதான் முடிவு செய்யும்.

இதை தயார்படுத்துவது மட்டுமே பள்ளிக்கல்வித்துறை. இதற்கான அரசாணையை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் அரசு பள்ளியில் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிப்பது குறித்த வழக்கில் நீதிபதிகள் கூறும் கருத்திற்கேற்ப முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும்.

மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான காலிப்பணியிடங்கள் குறித்தும், பள்ளியில் உள்ள இடவசதிக்கேற்ப என்னென்ன விளையாட்டுகளை கொண்டு வரலாம் என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு நடைபெறுவதாக கூறும் பொதுத்தேர்வு குறித்து கேள்வி கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘5,8 ஆம் தேதி வகுப்புக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு இல்லை.

பெற்றோர்களும், மாணவர்களும், இதற்காக அச்சப்படவோ, குழப்பம் அடையவோ தேவை இல்லை’ என்று தெரிவித்தார்.