PT Selvakumar ask questions to Minister Rajendra Balaji
PT Selvakumar ask questions to Minister Rajendra Balaji

கலப்பை மக்கள் இயக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 40 நாட்களாக உதவி வருகிறது. இன்றைய தினம் 130 கோயில் பூசாரிகள், நடைபாதை கடை ஏழை பெண் வியாபாரிகளுக்கு அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பாக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என 150 பெண்களும் கைகூப்பி வணங்கி முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் வைத்தார் கலப்பை மக்கள் இயக்க தலைவர் P.T.செல்வகுமார். அப்போது டாஸ்மாக் வேணடாம் என்ற பிரச்சினை பொது தளங்களில் விவாதமேடை ஆகியது.

PT Selvakumar ask questions to Minister Rajendra Balaji – நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளி மாநில போலி மதுவால் தான் டாஸ்மாக் கடைகளை திறக்கிறோம் என்று கூறினார். இதற்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வகுமார் பதிலளித்துள்ளார்.

250 அரசி மூட்டைகள் பர்மா அகதிகளுக்கு விஜய் பட தயாரிப்பாளர் உதவி – புகைப்படங்களுடன் இதோ.!

மாண்புமிகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிந்து பேசுகிறாரா? தெரியாமல் பேசுகிறாரா? என்பது தெரியவில்லை. ஊரடங்கால் அனைத்து இடங்களிலும் செக் போஸ்ட் போட்டு தீவிரமாக கண்காணிக்கிறார்கள் . ஊர் விட்டு ஊர் போக முடியாத அளவிற்கு கண்டிப்பாக கட்டுக்கோப்பாக காவல்துறை அதிகாரிகள் வழி நடத்தி வருகிறார்கள். இதை மீறி எப்படி போலி மது வர முடியும். அப்படி என்றால் காவல் துறையினரை சந்தேக படுகிறீர்களா? அப்படியே போலி மது வந்தாலும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நாங்களும் மது கடைகளை திறப்போம் என்பது விந்தையாக உள்ளது. கொரோனாவால் ஏழை மக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கபட்டிருக்கும் இந்த வேளையில் அவர்கள் மன வேதனை அறியாமல் எதோ பேச வேண்டும் என்பதற்காக பேசியுள்ளார். இப்போதைய ஒரே நோக்கம் கொரோனோவை ஒழிப்பதே! ஏழைகளை காப்பதே!டாஸ்மாக்கை திறந்தால் இந்த 40 நாட்கள் தவ வாழ்க்கை பலனின்றி போய்விடும்.

லாட்டரியை ஒழித்த அம்மா அரசு டாஸ்மாக்கை ஒழிக்க முடியாதா….

அம்மா அவர்கள் ஆட்சியில் லாட்டரியை ஒழித்து ஏழை எளிய மக்களை காப்பாற்றினார். அப்போதும் அருகாமை மாநில லாட்டரி விற்பனைக்கு வந்து விடும் என்று பலரும் கூறினார்கள். ஆனால் அம்மா இரும்பு கரம் கொண்டு அதை ஒடுக்கினார்.அதே போல் போலி, திருட்டு மது வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு அடக்கி குண்டர் சட்டம் மூலம் ஒழிக்க வேண்டும். மொத்தத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் மது கடைகளை மூடி ஏழை மக்களை காப்பாற்ற வேண்டும். வருமானம் போய் விடும் என்றால் மதுக்கடைகளை காய்கறி கடைகளாக மாற்றுங்கள்.வருமானமும் வரும்,வேலையும் கிடைக்கும் , ஏழை விவசாயிகளும் காப்பாற்றபடுவார்கள். என்று கலப்பை மக்கள் இயக்க தலைவர் .பி.டி. செல்வகுமார் பேசினார்.

இந்த நிகழ்வில் கலப்பை மாநில ஒருகிணைப்பாளர் V.K.வெங்கடேசன், லீ பேலஸ் கார்த்திக், செட்டிகுளம் ஆனந்த் ,சமூக ஆர்வலர் வேந்தரசி கலந்து கொண்டனர்..தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அவர்கள் அரிசி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கபட்டது. இந்த நிகழ்வில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.

PT Selvakumar ask questions to Minister Rajendra Balaji
PT Selvakumar ask questions to Minister Rajendra Balaji