பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் முக்கிய அறிவிப்பு குறித்த ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்திருந்தனர். 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியை கண்ட இப்படம் தற்போது இரண்டாம் பாகத்திற்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை படக்குழு ஸ்பெஷல் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது.

அதில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தின் முக்கிய தகவலை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் ஸ்பெஷல் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.