சூர்யா போய் விமர்சித்த அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

Producer Counsil Warning to Anbumani Ramadoss : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் மற்றும் தயாரிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

அதேசமயம் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காட்சி நீக்கப்பட்டது. இருப்பினும் இவரை கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர்.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.! | Valimai | Latest News | HD

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் படத்தில் இடம்பெற்ற காட்சிக்கும் சூர்யாவுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. தொழில்நுட்ப கலைஞர்கள் தவறை புரிந்துகொண்ட படக்குழு அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கியது. அப்படியிருந்தும் தொடர்ந்து உங்களது கட்சிக்காரர்கள் சூர்யாவை விமர்சனம் செய்து வருவது நியாயமானதாக இல்லை.

இந்திய இளைஞர்களை இந்நிகழ்வுகள் ஈர்க்கும் : அர்ஜூனா விருது பெற்ற டென்னிஸ் புயல் அங்கீதா

அவர்கள் சூர்யாவை விமர்சிப்பதை அடியோடு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதைப்போல் சமூக வலைதளப் பக்கங்களில் சூர்யாவிற்கு வி ஸ்டாண்ட் வித் வித் சூர்யா என்ற பெயரில் ஆதரவு குவிந்து வருகிறது.