Producer Complaint on Thala Ajith

1996 இல் தல அஜித் ஆர் லட்சம் கடன் வாங்கி திருப்பி தரவில்லை என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.

Producer Complaint on Thala Ajith : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அஜித் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனம் உடையவர் என பலராலும் புகழப்படுபவர். தன்னால் முடிந்த உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார்.

இப்படியான நிலையில் இவர் மீது பிரபல தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு அஜித் ஒரு நாள் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து ரூபாய் 6 லட்சம் கடன் கேட்டார். தன்னுடைய பெற்றோர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் அதற்காக பணம் தேவைப்படுவதாக கூறினார்.

தல அஜித் திருப்பித் தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பணத்தை கொடுத்தேன். ஆனால் இதுநாள் வரை அவர் எனக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

அப்போது அஜித் மாணிக்க நாராயணனின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதனை வைத்தே அஜித்திற்கு இவர் இந்த பணத்தை கொடுத்து இருப்பார் என கூறப்படுகிறது.

ஆனால் அஜித்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக தற்போது இவர் பணம் கேட்டு பேசியுள்ளார். எனக்கு இனி கால்ஷீட் கொடுத்தாலும் தேவையில்லை. அந்த 6 லட்சம் பணத்தை எப்போது திருப்பித் தருவீர்கள் என பேட்டியளித்துள்ளார்.

இவருடைய இந்த பேட்டி தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.