Pro Kabaddi League : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, Bengal Warriors

Pro Kabaddi League :

Pro Kabaddi League :  7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் அணி-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெங்கால் வாரியர்ஸ் அணி அதிரடியாக ஆடியது. இதனால் அந்த அணி முதல் பாதியின் முடிவில் 30 – 14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் பெங்கால் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் அரியானா அணியினரின் ஆட்டம் எடுபடவில்லை.

இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 48 -36 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

17-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. 16-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா ஸ்டீலர்ஸ் அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.