தங்க நிற புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் “ரகு தாத்தா”என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியானது.
இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ஜீ5 OTT தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக தங்க நிற புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.