ஒரு பதிவினால் இரண்டு மாத உழைப்பு வீண் போனது என்று லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.அதனை தொடர்ந்து கைதி,மாஸ்டர் என இரண்டு படங்களை இயக்கி பிரபலமானார்.
கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய விக்ரம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில்,ஒரு பதிவினால் பலரின் இரண்டு மாத உழைப்பு வீண் போனது.
ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
இவரின் இந்த பதிவு வெளியாகி ரசிகர்களுடைய பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.