நேற்று நடந்த கபடி போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா யுபி யோத்தாஸ் அணிகள் விளையாடின.

நேற்றுடன் சென்னையில் நடைபெறுவதாக இருந்த அத்தனை போட்டிகளும் முடிவடைய இருந்த நிலையில் பாட்னா வெற்றி முனைப்புடன் ஆட்டத்தின் தொடக்கம் முதல் விளையாடியது.

தனது முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியிடம் தோற்ற பாட்னா அணி வீரர்கள் அடுத்தடுத்து சுற்றுகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

நேற்றைய ஆட்டத்தில் முதல் பாதியில் 25-21 என்ற நிலையில் இருந்தது. ஆட்டத்தின் பிற்பாதியில் ஆட்டம் முழுவதுமாக பாட்னா அணி வீரர்கள் கைவசம் வந்தது. இறுதியை யுபி அணி போராடி 43-41, 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.