
மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளார் பிரியங்கா நல்காரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதாராமன் சீரியலில் நடிக்க தொடங்கினார்.
அதன் பிறகு தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் கணவரின் வேண்டுகோளை ஏற்று சீதாராமன் சீரியலில் இருந்து விலகினார். பிறகு கணவருடன் மலேசியாவின் செட்டில் ஆன நிலையில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
தெலுங்கு சீரியல் மூலம் மீண்டும் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் பிரியங்கா. ஹைதராபாத்தில் தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரோஜா பேக் டூ ஃபார்ம் என தெரிவித்துள்ளார். இதனால் பிரியங்கா நல்காரி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.