
முதல் குழந்தை பிறந்து 7 மாதமே ஆன நிலையில் பிரியங்கா சோப்ரா ஒரு முடிவை எடுத்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனை எடுத்து பாலிவுட் பக்கம் சென்று கொடிகட்டி பறக்கும் நடிகையான இவர் வெளிநாட்டு இசைக்கலைஞர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்கள் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டனர். பிறந்த குழந்தைக்கு 7 மாதமான நிலையில் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள இவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது குழந்தையையும் வாடகை தாய் மூலம் பெற்றுக்கொள்ள பிரியங்கா சோப்ரா முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் குழந்தை பிறந்து 7 மாதமையான நிலையில் இரண்டாவது குழந்தையா என பல கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் பிரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.