நண்பர்களுடன் பாட்டு பாடி மகிழ்ந்த வீடியோவை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Priya bhavani Shankar latest fun time video viral:

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவருக்கும் பரிசயமானவர் பிரியா பவானி சங்கர். அதன் பிறகு மேயாத மான் திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது நண்பர்களுடன் பாட்டு பாடி ஃபன் செய்திருக்கும் வீடியோக்களை பதிவிட்டு இன்னிசை மழையில் நனைய தயாரா என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.