இந்த வருடம் நிச்சயம் திருமணம் என புத்தாண்டு தினத்தில் பிரேம்ஜி அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது குணச்சித்திர வேடம் இசை அமைப்பாளர் என பன்முக திறமைகளுடன் வளம் வருகிறார் நடிகர் பிரேம்ஜி.
கங்கை அமரனின் மகனும் வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த தம்பியுமான பிரேம்ஜிக்கு தற்போது 44 வயதாகிறது. ஆனால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார்.
இப்படியான நிலையில் புத்தாண்டு தினமான நேற்று தன்னுடைய எக்ஸ் வளையதள பக்கத்தில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து விடுவேன் ஹாப்பி நியூ இயர் என தெரிவித்து பதிவு பதிவு செய்துள்ளார்.
ஆனால் மணப்பெண் யார்? எப்போது திருமணம் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.