பிரதீப்பின் வளர்ச்சியை, தனுஷ் மறைமுகமாக தடுக்கிறாரா?: கண்ணீர் நிகழ்வுகள்
குறுகிய காலத்திலேயே, தனது தனித்த திறமையால் பிரதீப் ரங்கநாதன் வளர்ந்து நிற்பவர். தற்போது இவரது மன அழுத்தத்தின் பின்னணி என்ன? இது குறித்த விவரம் பார்ப்போம்..
தமிழ் சினிமாவில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மூலமாக பிரதீப் ரங்கநாதன் இயக்குனராகவும் நடிகராகவும் பாராட்டப்பட்டார்.
இச்சூழலில், குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து, பல மடங்கு லாபத்தை ஈட்டிய நடிகராக தற்போது பிரதீப் பேசப்படுவது சிலருக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இச்சூழ்நிலையில் ‘டிராகன்’ இசை வெளியீட்டு விழாவில் பிரதீப் பேசும்போது, மிகவும் கண்கலங்கி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதீப்புக்கு மன அழுத்தம் கொடுத்தது யார்? என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.
அதாவது, அவர் தனுஷ் போல இருப்பதால் தனுஷ் தான், பிரதீப் தன் இடத்திற்கு வந்துவிடுவார் என்கிற எண்ணத்தில், ஏதோ திரைமறைவு வேலைகளில் பிரதீப்புக்கு எதிராக செயல்படுகிறார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தனுஷ் அப்படியொரு இழிவான செயலில் ஈடுபடுபவர் அல்ல எனவும் உறுதியாக சொல்லப்படுகிறது.
பிரபதீப் ரங்கநாதன் படத்தின் புரொமோஷனுக்காக ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல, அது தனுஷின் தலையில் விழுந்திருக்கிறது. முதலில், பிரதீப் மேடையில் இது போன்று பேசுவதை தவிர்க்க வேண்டும். அதுதான் பொறுப்பான கதாநாயகனுக்கு அழகு. மேடையில் அழுவது, புலம்புவதால் தீர்வு எட்டப்படுமா? அது தன்னம்பிக்கை மிகுந்த மனிதனுக்கு இழுக்காகும் எனவும் பிரதீப்புக்கு, திரை ஆர்வலர்களால் அறிவுறுத்தப்படுவது வைரலாகி வருகிறது.
பொதுவாக, சினிமாவில் ஒருவரின் வளர்ச்சியை தடுக்கும் வேலை கட்டாயம் நடக்கும், அது சிவகார்த்திகேயனுக்கும் நடந்து இருக்கிறது. அதை அவர் மேடையில் பேசி புலம்பினார். பின்னர், சுதாரித்துக் கொண்டார் என்பதை பிரதீப் புரிந்து கொண்டால் மேலும் சிறப்பாகும் வரலாறுதான்.!