
இந்திய சினிமாவில் புதிய ரெக்கார்டு படைத்து நடிகர் பிரதீப் சாதனை
‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது போல, குறும்படத்தில் தொடங்கிய ஆர்வம் இன்று சாதனைச் சமுத்திரமாகி இருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்..
முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தவர்கள் பலரும் ஹீரோவாக நடித்தவரை பாராட்டி இருக்கிறார்கள்.
இயக்கிய தனக்கு பாராட்டு கிடைக்காததால், ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்து, முதலில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்க ‘கோமாளி’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தான் இயக்கிய ‘அப்பா லாக்’ குறும்படத்தை ‘லவ் டுடே’ திரைப்படமாக இயக்கி ஹீரோவாகவும் பாராட்டு பெற்றார். இதனைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் ரிலீஸான 10 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இந்திய சினிமா வரலாற்றில் எந்த ஒரு நடிகரும் படைத்திராத சாதனையை படைத்துள்ளார் பிரதீப். அவ்வகையில், பிரதீப் நடித்த 2 படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்திய நடிகர்களில் புதிய ரெக்கார்டு படைத்துள்ளார் பிரதீப்.