Prabhas Says About Pair With Samantha
Prabhas Says About Pair With Samantha

சமந்தாவுடன் நடிக்க மறுப்பது ஏன் என பாகுபலி பிரபாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Prabhas Says About Pair With Samantha : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் அனுஷ்கா, திரிஷா, தமன்னா, நயன்தாரா என பல நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனாலும் இதுவரை ஒருமுறை கூட சமந்தாவுடன் இணைந்து நடித்ததில்லை. இதற்கான காரணம் என்ன எனக் கேட்டதற்கு பிரபாஸ் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார்.

ரஜினியின் கட்டளையை மீறி விட்டோம். அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக..? – இயக்குனர் பேரரசு பரபரப்பு ட்வீட்.!

எனக்கும் சமந்தாவுக்கும் உயரப் பிரச்சனை உள்ளது. இதனால் தான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என கூறியுள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான சாகோ படத்திலும் சமந்தா தான் நடிக்க இருந்தார். ஆனால் இறுதியில் இவருக்கு பதிலாக ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் கமிட்டாகி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.