Direct Perarasu About Rajinikanth Help
Direct Perarasu About Rajinikanth Help

ரஜினியின் கட்டளையை மீறி விட்டோம் என இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.

Direct Perarasu About Rajinikanth Help : கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் ஒட்டு மொத்த துறைகளும் முடங்கியுள்ளது. முடங்கியுள்ள துறைகளில் சினிமா துறையும் ஒன்று.

இதனால் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கலைஞர்கள் என அத்தனை பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி அளித்து உதவி வருகின்றனர்.

கேட்காமலேயே உதவியை வாரி வழங்கிய ரஜினி.. நன்றி கூறி அறிக்கை வெளியிட்ட இயக்குனர்கள் சங்கம் – என்ன உதவி செய்து இருக்கார் பாருங்க.!

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் டன் கணக்கில் மளிகைப் பொருட்களை அனுப்பி இயக்குனர் சங்கத்திற்கு உதவி இருந்தார்.

இதுகுறித்து இயக்குநர் சங்கத்தின் பொருளாளர் பேரரசு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் தான் செய்த உதவியை பத்திரிக்கையாளர்களுக்கு சொல்ல வேண்டாம் என ரஜினி கூறியதை தாங்கள் மீறிவிட்டதாக கூறியுள்ளார்.

ரஜினி சொல்லிவிட்டார் என்பதற்காக அவர் செய்த உதவியை எப்படி சொல்லாமல் இருப்பது எனவும் அவர் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

https://twitter.com/ARASUPERARASU/status/1253377907688259584?s=19