வனிதாவுடன் ஜோடி போட்டு நடித்து வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Power Star Srinivasan Health Status: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரத் தொடங்கி தற்போது ஹீரோவாக சில படங்களில் நடித்து வருபவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து காமெடியனாக பல்வேறு படங்களில் நடித்தார்.

கெடுபலன் குறைக்கும், சப்தகுரு வழிபாடு.!

இவரது நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிக்கப் டிராப். இந்த படத்தில் வனிதா விஜயகுமார் நாயகியாக நடித்து வருகிறார். காமெடி கலந்த திரைப் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.! | Valimai | Latest News | HD

இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கிய பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் விபத்தில் சிக்கியபோது வலி எதுவும் தெரியவில்லை. ஆனால் அதன்பிறகு வலி தாங்க முடியவில்லை மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தபோது முதுகு தண்டு உடைந்து இருப்பதாக கூறினர்.

இதனையடுத்து சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது ஒரு அளவிற்கு உடல் நிலை பரவாயில்லை. விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.