நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் நடிகர் அஜித்தா & விஜய்யா என்ற விவாதத்தை மீண்டும் பிரபல பத்திரிகை நிறுவனம் கிளப்பியுள்ளது.

Popular magazine that reignited the debate on who is no 1 actor issues:

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர்கள் தான் அஜித் மற்றும் விஜய். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர்களது நடிப்பில் அண்மையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் யார் நம்பர் 1 என்ற விவாதம் ஏற்பட்டு பெரும் சர்ச்சையாக பேசப்பட்டிருந்தது. அதன் பிறகு ஓய்ந்திருந்த இந்த சர்ச்சையை மீண்டும் பிரபல பத்திரிகை நிறுவனம் தொடங்கியுள்ளது.

அதாவது பிரபல பத்திரிகை நிறுவனமான குமுதம் இதழில் முதல் இடத்தில் இருப்பவர் அஜித் தான் என்றும் தற்போது அவர் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும் குறிப்பிட்டு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த பக்கத்தில் தனக்கு தானே டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் அவர்கள் ரஜினியை விட 50 கோடி அதிகமாக சம்பளம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளது. அதனால் உண்மையாவே நம்பர் ஒன் யார்? அஜித்தா & விஜய் என்ற விவாதம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளது.