விஜயின் லியோ திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக விளங்கி வரும் திரைப்படம் லியோ. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் சமீபத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய் குரலில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய பாடலுக்கான படப்பிடிப்பை படக்குழு சுமார் 2000 நடன கலைஞர்களுடன் படமாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி வைரலானது.

இதனைத் தொடர்ந்து கிளைமேக்ஸ் காட்சிக்காக படக்குழு ஹைதராபாத் செல்ல இருப்பதாக கூறிவரும் நிலையில் புது அப்டேட்டாக இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்திருப்பதாகவும் அவருக்கான காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கனவே நான்கு நாட்கள் நடந்து முடிந்து விட்டதாகவும். தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரை உலகில் பிரபல நடிகராக வலம் வரும் டென்சில் ஸ்மித் அவர்கள் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனட் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே பல உச்ச நட்சத்திரங்கள் லியோ படத்தில் இணைந்திருக்கும் நிலையில் இவரையும் லோகேஷ் கனகராஜ் சேர்த்திருப்பது படத்தின் கதை எப்படி தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.