புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய விஜயின் வீடியோவை நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் இவர் நேற்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் லியோ படகுழுவும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டு இருந்தனர்.

மேலும் பல முன்னணி பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வாயிலாக நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழும் நடிகை பூஜா ஹெக்டே விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பகிர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் அவர் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் டான்ஸ் மாஸ்டர் சதீஷ், பூஜா ஹெக்டே, தளபதி விஜய் இணைந்து புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய க்யூட் வீடியோவை பதிவிட்டு விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.