பூஜா ஹெக்டே மாடலிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Pooja Hegde Look Before Cinema : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.இந்தப் படம் பூஜா ஹெக்டேவிற்கு தோல்வியைக் கொடுத்து இருந்தது.
அதனால் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களோடு நடிக்க ஆரம்பித்தார்.அதன்பின் தெலுங்கில் வெளியான “புட்ட பொம்மா” என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் பூஜா ஹெக்டே.
இதனைத் தொடர்ந்து தமிழில் நெல்சன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான “பீஸ்ட்” படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டேவிற்கு இந்த படம் வெற்றி படமாக அமைந்தது.
இந்நிலையில் பூஜா ஹெக்டே சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் செய்து கொண்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளிவந்து தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.