நடிகை பூஜா ஹெக்டே திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மொழியில் மிகவும் பிரபலமான இவர் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல வருடங்களுக்குப் பிறகு இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
இப்படி பிஸியாக இருந்து வரும் பூஜா ஹெக்டே தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் திருமண கோலத்தில் சில போட்டோக்களை வெளியிட்ட இதனை பார்த்த ரசிகர்கள் பூஜாவுக்கு கல்யாணமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.