Pooja Hegde Call Sheet Details for Vijay 65

விஜயுடன் நடிக்க ரூபாய் 3.5 கோடி கேட்டு அடம்பிடித்த பூஜா ஹெக்டே தளபதி 65 படத்திற்கு எத்தனை நாள் கால்ஷூட் கொடுத்திருக்கிறார் என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Pooja Hegde Call Sheet Details for Vijay 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தினை நெல்சன் திலிப் குமார் இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. தற்போது உச்ச மார்க்கெட்டில் இருப்பதால் விஜயுடன் நடிக்க ரூபாய் 3.5 கோடி சம்பளமாக கேட்டு வந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கும் சம்மதம் தெரிவித்து அவரை கமிட் செய்துள்ளது. தற்போது இந்த படத்திற்காக பூஜா ஹெக்டே 70 முதல் 80 நாட்கள் வரை கால்ஷூட் கொடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.