கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஒன்லின் செல்லிங் சூட்டிங் விவகாரத்தில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Ponniyin Selvan Upcoming Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

மணிரத்னத்தின் கனவு படமான இத்திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

தீயாக பரவும் கொரானா.. பொன்னியின் செல்வன் குறித்து மணிரத்னம் எடுத்த திடீர் முடிவு

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், சென்னை மற்றும் வட மாநிலங்களில் படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக மே மாதத்தில் தொடங்கி அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க முடிவு எடுத்துள்ளார் மணிரத்னம். மேலும் வட மாநிலங்களில் படமாக்கும் திட்டத்தை கைவிட்டு அதற்கு பதிலாக சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.