பொன்னியின் செல்வன் 2 படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். ஏற்கனவே முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது.

இலங்கை சென்ற வந்தியத் தேவனும், அருண்மொழி வர்மனும் களம் வீழ்த்தப்பட்டு கடல் விழுங்க ஊமைராணி எனப்படும் மந்தாகினி கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் நிறைவடைந்திருந்தது பொன்னியின் செல்வன் முதல்பாகம்.

பொன்னியின் செல்வன் எனும் அருண்மொழி வர்மன் இறந்த செய்தி கேட்ட ஆதித்த கரிகாலன் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருக்க தஞ்சையும் சோகத்தில் மூழ்குகிறது.

இன்னொருபுறம் ஊமைராணியால் காப்பாற்றப்பட்ட அருண்மொழி வர்மனும், வந்தியத் தேவனும் பாண்டியர்களிடமிருந்து தப்பித்து புத்த பிட்சுகளிடம் தஞ்சமடைகின்றனர். ஒரு கட்டத்தில் அருண்மொழி வர்மன் உயிருடன் இருக்கும் செய்தி தஞ்சையை அடைகிறது.

ஆனால் ஆதித்த கரிகாலனைக் கொல்லக் காத்திருக்கும் நந்தினி ஆதித்த கரிகாலனை கடம்பூர் வரச் செய்கிறார். நந்தினி சூழ்ச்சி தெரிந்ததும் ஆதித்த கரிகாலன் கடம்பூர் அரண்மனை வருகிறார். அவருக்கு அங்கு என்ன நடந்தது? சோழ தேசம் என்ன ஆனது? அருண்மொழி வர்மன் அரசனாக முடிசூட்டப்பட்டாரா இல்லையா? என்பதே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் மீதி கதை.

முதல் பாகத்தைப் போல இந்த பாகமும் மிக பிரம்மாண்டமாக ரசிக்கும் வகையில் இயக்கி உள்ளார் மணிரத்தினம். ஒவ்வொரு நடிகர்களும் அவர்களின் கதாபாத்திரம் அறிந்து சிறப்பான நடிப்பை கொடுத்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

ரவிவர்மாவின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகழகாக படம் பார்க்க ஏ ஆர் ரகுமானின் இசை பெரிய பங்கு வகிக்கிறது.