Ponmagal Vandhal Movie Official Release Date
Ponmagal Vandhal Movie Official Release Date

எதிர்ப்புகளைத் தாண்டி சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அமேசன் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகிறது.

Ponmagal Vandhal Movie Official Release Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார்.

அதன்படி தற்போது இவருடைய தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக அமேசானில் வெளியாக இருப்பதாக தகவல் வந்தது.

சண்ட வேணாம்.. பேசி தீர்த்து விடுவோம் – சூர்யா பட பிரச்சனையில் பஞ்சாயத்துக்கு வந்த தமிழக அரசு.!

சூர்யாவின் இந்த முடிவுக்கு திரைத்துறையில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இனி சூர்யாவின் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறினார்கள்.

அப்படி இருந்து தடைகளை எல்லாம் மீறி இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வரும் மே 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் சூர்யாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.