Pongal Special Movies Telecast in Tamil

இந்த பொங்கலுக்கு சின்னத்திரையில் செம விருந்தாக புது புது திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

Pongal Special Movies Telecast in Tamil : பொதுவாக பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் திரையரங்குகளில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்துவது என்பது வழக்கமான ஒன்று. இந்த வருடமும் வலிமை, RRR, ராத்தே ஷ்யாம் என பல பெரிய திரை படங்கள் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Live-ஆக மேடையில் பாட்டு பாடி தெறிக்கவிட்ட Sid Sriram! | Chennai International Film Festival | HD

இந்த நிலையில் சின்னத்திரையில் பொங்கலை சிறப்பிக்க புதுப்புது திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. எந்தெந்த சேனலில் எந்தெந்த திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. அண்ணாத்த :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி சன் டிவியில் மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

சந்தனம், குங்குமம் பூசுவதன் காரணிகள்.!

  1. ஜெய் பீம் :

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

  1. அரண்மனை 3 :

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படம் கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 14-ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

  1. சார்பட்டா பரம்பரை :

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படம் தமிழ் சின்னத்திரையில் கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 16-ஆம் தேதி பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.