பொல்லாதவன் படத்தின் கன்னட ரீமேக் டைட்டில் பல வருடங்களுக்கு பிறகு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Polladhavan Kannada Remake Title : தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக கன்னட நடிகை ரம்யா நடித்திருந்தார்.

பொல்லாதவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற வெற்றியைப் பெற்றது. இன்று வரை ரசிகர்கள் கொண்டாடும் தனுஷ் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

பொல்லாதவன் கன்னட ரீமேக் டைட்டில் என்ன தெரியுமா? அடப்பாவிகளா இவ்வளவு அசிங்கமாவா டைட்டில் வைப்பாங்க??

தமிழ் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்தத் திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்திலும் ரீமேக் ஆனது. தற்போதைய விஷயம் என்னவென்றால் கன்னடத்தில் இப்படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டில் தான்.

தமிழில் பொல்லாதவன் என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்திற்கு கன்னடத்தில் Punda என டைட்டில் வைத்துள்ளனர். தமிழில் இது மிகவும் மோசமான வார்த்தையாக பார்க்கப்படுகிறது. இதனால் நெட்டிசன்கள் அடப்பாவிகளா இப்படியெல்லாமா டைட்டில் வைப்பாங்க என விமர்சனம் செய்து வருகின்றனர்.