Pichaikkaran 2 Latest Announcement
Pichaikkaran 2 Latest Announcement

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் பிச்சைக்காரன் படம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Pichaikkaran 2 Latest Announcement : தமிழ் சினிமாவில் நடிகராக இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இயக்குனர் சசி இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன்.

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் இன்றுவரை கொண்டாடப்படும் படமாக பிச்சைக்காரன் இருந்து வருகிறது. இந்த நிலையில் சசி இல்லாமல் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

விஜய் ஆண்டனியின் பிறந்த நாளில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் பாரம் என்ற படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனரான ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் பிச்சைக்காரன் இரண்டு உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவியும் கிளாமர் கதாபாத்திர வாய்ப்புகள்.. சாய் பல்லவி எடுத்த அதிரடி முடிவு – நீங்க வேற லெவல்!

விஜய் ஆண்டனி தயாரிக்கும் பத்தாவது படமாக இப்படம் உருவாக உள்ளது. படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் மனைவியுமான பாத்திமா உங்களின் கனவு படத்தை பிச்சைக்காரன் 2 என்ற பெயரில் அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

பிச்சைக்காரன் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சசிக்கு நன்றி. நம்பிக்கையுடன் எங்களது பயணத்தை தொடர்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய மகேஷ் மேத்யூ சண்டை பயிற்சியாளராக ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.