Petta Collection

Petta Collection : விஸ்வாசம், பேட்ட திரைப்படத்தின் சர்ச்சைகள் எல்லாம் எனக்கு தேவையில்லை. பேட்ட படத்தின் உண்மையான வசூல் நிலவரம் இது தான் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

4 சூப்பர் ஸ்டாருக்கு சமம் என்றால் அது இவர் தான் – பார்த்திபன் பேச்சு.!

இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வந்த நிலையிலும் வசூலில் பேட்ட தான் அதிகம், இல்லை விஸ்வாசம் தான் அதிகம் என பல சர்ச்சைகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் தற்போது உதயநிதி அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்த கேள்விக்கு பேட்ட, விஸ்வாசம் சர்ச்சைகளுக்கு உள்ளே நான் போக விரும்பவில்லை.

ஆனால் பேட்ட திரைப்படம் எங்களுக்கு பல மடங்கு லாபத்தை கொடுத்தது. இதனை நான் ரஜினி சாரிடமும் கூறினேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.