Petta Status

Petta Status : சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முடிவால் பேட்டைக்கு விழுந்த பலத்த அடி – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

சொல் பேச்சை கேட்காமல் ஆந்திராவில் பேட்ட படத்தை ரிலீஸ் செய்து பலத்த அடிக்கு அவர்களே காரணமாகியுள்ளார்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்த படம் பேட்ட.

சூர்யாவுடன் இரண்டாவது திருமணம் பிரபல நடிகையை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.!

கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான இந்த படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி வருகிறது.

ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் பலத்த அடி வாங்கியுள்ளது. அதற்கு முழு காரணமும் சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தான் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பேட்ட படம் ரிலீசான அன்று தெலுங்குவில் 3 நேரடி படங்கள் ரிலீஸ் ஆனதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் எனவே படத்தை பிறகு ரிலீஸ் செய்யுங்கள் என விநியோகிஸ்தர்கள் கூறி இருந்தனர்.

இதனால் விஸ்வாசம் படத்தின் தெலுங்கு ரிலீஸ் தள்ளி போனது. ஆனால் சன் பிக்ஸர்ஸ் பேட்ட படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என ஒரே நாளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.

இறுதியில் ஜெயிக்க போவது பேட்டயா? விஸ்வாசமா? – பிரபல விநியோகிஸ்தர் அதிரடி பேட்டி.!

ஆகவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரிய அளவில் தியேட்டர் கிடைக்காததால் வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளது. இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்குவை தவிர பேட்ட படம் மற்ற அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.