Petta Vs Viswasan

Petta Vs Viswasam : இறுதியில் ஜெயிக்க போவது எது பேட்டயா? விஸ்வாசமா? என பிரபல விநியோகிஸ்தர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் என இரு பெரிய படங்கள் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியானது.

விஸ்வாசம் உண்மையான வசூல் – இயக்குனர் சிவா இப்படி சொல்லிட்டாரே!

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

தமிழகத்தின் பேட்ட படத்தின் வசூலை விட விஸ்வாசம் படத்திற்கு அதிகம் எனவும் விநியோகிஸ்தர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பேட்ட படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை சேர்ந்த பிரபலமான செண்பகமூர்த்தி என்பவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இறுதியில் ஜெயிக்க போவது எது என்று கூறியுள்ளார்.

விஜய் கொஞ்சமும் மாறவே இல்ல – ரசிகர்கள் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்து வருகின்றன. ஆனால் இறுதியில் பேட்ட படம் தான் வசூல் ரீதியாக ஜெயிக்கும்.

ரஜினிகாந்தின் பேட்ட படம் நின்னு பேசும் என கூறியுள்ளார். இதுவரை நாங்கள் ரிலீஸ் செய்ததிலேயே பேட்ட தான் அதிகம் வசூல் செய்த படம் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.