வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனில் கலந்து கொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் இணையதளத்தை தெறிக்க விட்டதை தொடர்ந்து இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன் பிறகு பிரமோஷன் பணிகளுக்காக தயாராகி வரும் படக்குழு தெலுங்கில் வாரசுடு படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாம். அந்நிகழ்ச்சியில் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் பவன் கல்யாண் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இந்த தகவலை இணையதளத்தில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர்.