Pattas Motion Poster
ரிலீஸ் தேதியுடன் பட்டாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். கொடி படத்தின் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமில்லாமல் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தனர்.

அதன்படி தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ ரிலீஸ் தேதியுடனான மோஷன் போஸ்டர் உங்களின் பார்வைக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.