Parthiban Tweet About OS7 Response : Tweet Inside | Kollywood Cinema news | Tamil Cinema News | Oththa Serupu Size 7 | OS 7 Movie Reviews
நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தை ஒப்பிட்டு ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரசிகருக்கு பார்த்திபன் தனது வழக்கமான பாணியில் பதில் கூறியுள்ளார்.

Parthiban reply to netizen in his own style – தான் மட்டும் நடித்து ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்திபன் இயக்கியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என அனைத்து வேலைகளையும் பார்த்திபனே செய்துள்ளார்.

இப்படம் கடந்த 20ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தனர்.

அதேபோல் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரிலும் இப்படத்தை பார்த்த பலரும் படத்தையும், பார்த்திபனையும் பாராட்டி டிவிட் செய்து வருகின்றனர். அப்படி வரும் சிறப்பான பாராட்டுகளுக்கு பார்த்திபன் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், மணவாளன் என்கிற ரசிகர் ஒருவர் ‘நம்ம வீட்டு பிள்ளை படத்துல 40 பேரு இருக்காங்க. ஒருத்தர் கதாபாத்திரமும் மனசுல நிக்கல.. ஆனால், ஒரே ஒரு ஆள் தான் இருக்காரு. ஆனா, 40 பேரையும் கண்ணு முன்னாடி வந்து போறாங்க’ என பாராட்டியிருந்தார்.

இதற்கு ‘நீங்க மணவாளனா? மன’ வாளனா? என தன்னுடைய ஸ்டைலில் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார்.