எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து அந்த இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

ஜீவானந்தம் துப்பாக்கியை காட்டு மிரட்ட ஒட்டி பாம்பாக அடங்கிப் போய் உள்ளார் குணசேகரன். இப்படி பரபர திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மெட்டி ஒலி உட்பட பல சன் டிவி சீரியல்களில் நடித்துள்ள சாந்தி வில்லியம்ஸ் தான் அந்த நடிகை. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையின் அம்மாவாக நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் இவரால் கதைக்களம் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.