Pandian Stores Serial Actor Wishes to Vijay
Pandian Stores Serial Actor Wishes to Vijay

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோ ஒருவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது விஜய் டிவி தெரியப்படுத்தியுள்ளது.

Pandian Stores Serial Actor Wishes to Vijay : தமிழ் சின்னத்திரை முன்னணி தொலைக்காட்சி சேனலாக வலம் வருவது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் குமரன் – முல்லை, ஜீவா – மீனா என்ற ஜோடிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஜோடியாக இருந்து வருகிறது.

இந்த சீரியல் மூலமாக இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இவர்களது செயல்பாடுகளை அவரது ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

விஜய் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய பிரபல இயக்குனரின் படக்குழு – இதுவும் நல்லாதான் இருக்குப்பா!

இந்த நிலையில் தற்போது ஜீவா தளபதி விஜயின் உருவம் பொறிக்கப்பட்ட மாஸ்க் அணிந்து கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை விஜய் டிவி நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் ஜீவா தளபதி விஜய்யின் வெறியன் எனவும் குறிப்பிட்டுள்ளது.

விஜயின் பிறந்த நாளுக்கு விஜய் டிவி கூறிய வாழ்த்து பதிவு