ஹீரோயின் ஆகியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு மருமகள்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களுக்கு பெயர் போன சேனலாக மாறி உள்ளது விஜய் டிவி. இல்ல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. சமீபத்தில் கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது தொடர்ந்து தற்போது மேலும் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

தாய் செல்வம் அவர்களின் பெயரில் தாய் கிரியேஷன் உருவாக்கப்பட்டு அதன் மூலம் நீ நான் காதல் என்ற சீரியல் உருவாகி வருகிறது. இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவாக நடித்த சாய் காயத்ரி நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமல்லாமல் நாயகனாக சங்கரேஷ் நடிக்க உள்ளாராம். ரோஜா, விக்ரம் வேதா உதித்த சீரியல் நடித்த சங்கரேஷ் இந்த சீரியல் மூலம் ஹீரோவாக தடம் பதிக்க உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.