குல தெய்வ கோவிலுக்கு தனம் அழைக்க கண்ணன் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

Pandian Stores Episode Update 30.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணனும் ஐஸ்வர்யாவும் நேற்று கடைக்கு சென்ற நிலையில் ஜனார்த்தனன் அவர்களை திட்டினார். உங்களை இனி வீட்டிற்குள் சேர்த்து கொள்ள வாய்ப்பே இல்லை என பேசினார்.

குல தெய்வ கோவிலுக்கு அழைக்கும் தனம்.. கண்ணன் எடுத்த அதிர்ச்சி முடிவு - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்.!!

அதன் பின்னர் தனம் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்தது மட்டுமின்றி கடைக்கு முல்லையிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பினார். முல்லை தனம் அக்கா தான் சமைத்து கொடுத்ததாக கூறி அவர்களை சாப்பிட வைத்தார்.

பின்னர் முல்லையின் அப்பா வீட்டுக்கு வந்து பார்வதி குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு விட்டு வரணும் என சொன்னதாக கூறினார். இதனையடுத்து நாளைக்கே நல்ல நாள் தான் நாளைக்கே சென்று விடலாம் என தனத்தின் அம்மா கூறினார்.

மீனா வீட்டில் உள்ள எல்லாரும்னா கண்ணனை கூப்பிடலாமா என கேட்கிறார். கண்ணனும் தான் என தனம் கூறுகிறார். ‌‌பின்னர் மீனா தன் அப்பாவுக்கு போன் செய்து கோவிலுக்கு அழைக்கிறார். கண்ணனுக்கும் ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கூறுகிறார். அதன் பின்னர் ஜனார்த்தனன் கண்ணனிடம் கூற ஐஸ்வரியா போகலாமா மாமா என கேட்க வேண்டாம் என்பது போல கூறுகிறார் கண்ணன். இதனால் கண்ணன் முடிவு என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.