எதிர் வீட்டுக்கு குடி வந்ததும் கண்ணன் ஐஸ்வர்யாவும் அலப்பறையை தொடங்கியுள்ளனர்.

Pandian Stores Episode Update 11.10.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை எதிர் வீட்டில் குடி வைத்த கஸ்தூரி நேராக வீட்டிற்குச் சென்று கண்ணனும் ஐஸ்வர்யாவும் எதிர் வீட்டில் குடி வந்திருக்காங்க. கண்ணன் எதோ திட்டத்துடன்தான் வந்து இருக்கான் என கொளித்து போடுகிறார்.

அதன் பின்னர் மூர்த்தி கடைக்கு கிளம்பும்போது கண்ணும் அவருடைய வண்டியை துடைத்து கொண்டிருக்கிறார். பின்னர் மூர்த்தி வந்ததும் எடுத்து ஓரமாக நின்று கொண்ட கண்ணன் அவர் கிளம்பும் போது ஓடி வந்து வண்டிக்கு முன்னே கல் இருப்பதாகக் கூறி இந்த கல்லை எடுத்து தூரம் கொடுக்கிறார். மூர்த்தி கிளம்பியது கதிர் ஜீவாவிடம் ஏ அண்ணே அந்த கல்லு தடுக்கி அண்ணன் கீழே விழுந்து இருப்பாரா என கூறுகிறார். ஜீவா நானும் கண்ணனை என்னமோ நினைச்சேன். பெரிய ஆளாத்தான் இருக்கான்.. எதிர் வீட்டுக்கு குடிவந்து இருக்கா பாரேன் என கூறுகிறார்.

எதிர் வீட்டுக்கு குடி வந்ததும் கண்ணன் ஐஸ்வர்யாவும் செய்யும் அலப்பறை.‌. கொளுத்திப் போட்ட கஸ்தூரி - பாண்டியன் ஸ்டோர் இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்

பின்னர் கண்ணன் தன்னுடைய வீட்டைப் பார்த்துக் கொண்டு நிற்க ஐஸ்வர்யா வந்து காலேஜ் போறேன்னு சத்தமா சொல்லு கண்ணா அவங்களுக்கு கேட்கும் என கூறுகிறார். கண்ணனும் நான் காலேஜுக்கு கிளம்பி விட்டேன். மதியம் வந்துவிடுவேன். வந்ததும் சொல்கிறேன் என கத்துகிறார். யாரது வெளிய கத்திக் கொண்டே இருக்கிறது என தனம் கேட்க மீனா கண்ணன் தான் அவள் காலேஜுக்கு போறனு சொல்றான். பின்னர் தனம் யார் கத்தினா நமக்கென்ன என கூறிவிட்டு காலேஜிக்கு போனா சரிதான் என சொல்கிறார்.

அதன் பின்னர் இரவு தனம் வெளியில் கண்ணன் வீடு பூட்டி கிடக்கு.. என்னமா வேலை செஞ்சுகிட்டு இருக்கான் என யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் கதிர் வந்து இங்கே என்ன பண்றீங்க என கேட்கிறார். டாக்டர் நடக்க சொன்னாரு அதுதான் நடந்துட்டு இருக்கேன் என கூறுகிறார். அதன் பின்னர் கதிர் என்ன இன்னும் கண்ணன் வீடு பூட்டி இருக்கு என கேட்க நானும் அதை தான் பாத்துட்டு இருக்கேன் என கூறி தனம் சிக்கிக் கொள்கிறார்.

பின்னர் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருகின்றனர். கண்ணன் நாங்க சாப்பிட போறோம் இட்லி வாங்கிட்டு வந்து இருக்கோம். நீங்க சாப்பிட்டீங்களா? அங்க என்ன இட்லியா என அலப்பறை செய்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.