VJ Chithra

விஜே சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா? என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Pandian Store Chithra Mortuary Report : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையான சித்ரா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய தற்கொலையில் மர்மம் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். சித்ராவின் பெற்றோர் சித்ராவின் கணவர் ஹேமந்த் ஏமாற்றி திருமணம் செய்து அவரை கொன்று விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் சித்ராவின் கழுத்தில் பெரிய அளவில் காயம் இல்லாமல் கன்னத்தில் காயம் இருந்தது சந்தேகத்தை கிளப்பி இருந்தது. இது கொலையா தற்கொலையா என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பலர கேள்வி எழுப்பி வந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா மரணம் கொலையா? தற்கொலையா? பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்.!

இப்படியான நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் அவர் தற்கொலை செய்துதான் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவருடைய கன்னத்தில் இருந்த காயம் அவருடைய நகக்கீறல் தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிவில் மற்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட இந்த தகவலை வைத்து மக்கள் பலரும் இது பொய்யான ஒன்று, உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என குற்றம் சட்டி வருகின்றனர்.