Paiya
பையா படத்தில் முதலில் தமன்னாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது வேறொரு நடிகை தான் என ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் இயக்கிய படங்களில் பல படங்கள் இன்று வரை பேசப்படும் படமாக இருக்கிறது.

அதில் ஒன்று தான் கார்த்தி, தமன்னா நடித்திருந்த சூப்பர் ஹிட் படமான பையா. தற்போது லிங்குசாமி அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படத்தின் சீக்ரெட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது பையா படத்தில் முதலில் தமன்னாவுக்கு பதிலாக நயன்தாரா தான் நடிக்க இருந்தாராம். சம்பள பிரச்சனை, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர் விலகி கொண்டார். அதனால் தான் இந்த வாய்ப்பு தமன்னாவிற்கு சென்றது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.