மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லரை இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டி வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். இதில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதன் பிறகு இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை பாராட்டி இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், உன் திரைமொழியின் வளமையும், கதையும், கதையின் மாந்தர்களும் உண்மையை கேட்ககூடியவர்களை சென்றடையட்டும்! சிறப்பான முன்னோட்டத்தை தந்த மாமன்னன் படகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.