ஹீரோவாக அட்டகத்தி தினேஷ்; வில்லனாக ஆர்யா: ‘வேட்டுவம்’ படம் அப்டேட்ஸ்..
‘அட்டகத்தி’ படத்தின் மூலமாக அறிமுகமானார் இயக்குநர் பா.ரஞ்சித். இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் கபாலி, காலா, ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளார். இந்தப் படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஆர்யா தன் கட்டுமஸ்தான தோற்றப் புகைப்படங்களை வெளியிட்டு கிளைமேக்ஸுக்கு தயாராகி வருவதாகக் கூறினார். தற்போது ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pa ranjith in vettuvam movie shooting update
