Web Ads

அஜித் நடிக்கும் புதிய படம்: இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

Web Ad 2

அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸின் நடிப்பும் பாராட்டப்பட்டது. மேலும் பிரபு, பிரசன்னா, திரிஷா உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 64’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என அஜித் தெரிவித்திருந்தார்

இச்சூழலில், அஜித்தின் 64-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனஆதிக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், ‘முன்தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன. லொகேஷன்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கிவிடும்.

இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷலான படம். அஜித் சார் சினிமாவை எந்தளவு நேசிக்கிறாரோ, அதே அளவு ரேஸிங்கையும் விரும்புகிறார். இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறார். வரவிருக்கும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக வர நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்’ என தெரிவித்தார். அஜித்தின் புதுப்பட அப்டேட்டை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

adhik ravichandran update on the shooting of ajith 64th film
adhik ravichandran update on the shooting of ajith 64th film