P.V. Sindhu thanks fans : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, World Badminton Championship

P.V. Sindhu thanks fans :

P.V. Sindhu thanks fans :  உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில், ‘பேட்மிண்டன் தரவரிசையில் விரைவில் முதலிடத்தை பிடிப்பேன் என்று நம்புகிறேன். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக என்னை பார்க்க ஆசைப்படுகிறேன்.

ஆனால் தரவரிசை குறித்து சிந்திப்பதை விட, இன்னும் நிறைய தொடர்களில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். போட்டிகளில் அசத்தினால், சிறந்த தரவரிசை தானாகவே கிடைக்கும்’ என்றார்.

கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே பிளவு?- வீடியோவை வெளியிட்ட அக்தர்!

தரவரிசையில் தற்போது 5-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து அதிகபட்சமாக 2-வது இடம் வரை முன்னேறி இருந்தார்.

அதே போல் உலக பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றிய சாய் பிரனீத், 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக பேட்மிண்டனில் பதக்கத்துக்கு முத்தமிட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

அவர் அளித்த பேட்டியில், ‘2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே எனது இலக்கு என்று தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.