Virat kohli and Rohit Sharma : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019

Virat kohli and Rohit Sharma :

உலக கோப்பை அரையிறுதியில் இருந்து இந்தியா வெளியேறியதில் இருந்தே, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும்,

துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே பிளவு நிலவி வருவதாகவும், உலக கோப்பை போட்டி தோல்விக்கு பிறகு இந்த விரிசல் அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.

சர்மாவுக்கும் எனக்கும் இடையே மோதல் நிலவுவதாக பரவிவரும் தகவல் முற்றிலும் பொய்யான செய்தி. எங்கள் இருவருக்கும் இடையே மிகவும் நல்ல உறவு நிடிக்கிறது’ என தெரிவித்திருந்தார்.

மே. தீ. அணிகளுடன் நடக்க இருக்கும் போட்டியில் தோனிக்கு பதில் 3 விக்கெட் கீப்பர்கள்!

இதையடுத்து மீண்டும் விரிசல் குறித்த சந்தேகம் எழுப்பும் வகையில், ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் அணிக்காக விளையாட வருவதில்லை.

என் நாட்டுக்காக மட்டுமே’ என பதிவிட்டிருந்தார். இதற்கிடையே, இந்திய அணியின் குறுகிய ஓவர் போட்டிகளின் கேப்டனாக கோலிக்கு பதில் ரோகித் இருக்க வேண்டும் என்ற சர்ச்சையும் எழுந்தது.

இதற்கிடையில் அக்தர் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அ‌தி‌ல் அவர் கூறியது :

கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் கடந்த 3,4 வருடங்களாக அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவரது தேவை சிறந்த பயிற்சியாளர், சிறந்த தேர்வுக்குழு.

இவை இரண்டும் சரியாக அமைந்தால் அவர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார். அதே சமயம் ரோகித் சர்மாவும் சிறந்தவர்.

மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக செயல்படுத்தியவர் அவர்தான். எனினும், கோலியை இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் அது முட்டாள்தனமான முடிவாகவே இருக்கும்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.