மோடியின் அரசியலைப் பங்கமாக கலாய்த்து உள்ளார் நடிகை ஓவியா.

Oviya Opinion on Modi Government : தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்று மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

மோடியின் அரசியலை பங்கமாக கலாய்த்த ஓவியா - சர்ச்சையை கிளப்பிய பதிவு.!!

அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்துள்ள ஓவியா தற்போது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவான ஒருவராக இருந்து வருகிறார். மேலும் இவர் மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றார்.

அந்த வகையில் இன்று ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் மோடியின் அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்க என்ன சார் பண்றது எல்லாம் சிரிப்பா இருக்கு என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்தப்பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆதரவாளர்கள் பலரும் ஓவியாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

மோடியின் அரசியலை பங்கமாக கலாய்த்த ஓவியா - சர்ச்சையை கிளப்பிய பதிவு.!!